search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாஸ்மாக் ஊழியர்கள் தாக்குதல்"

    திருப்பூர் அடுத்த வஞ்சிபாளையம் அருகே டாஸ்மாக் பாரில் ஊழியர்களை வெட்டி கொள்ளையடித்த வழக்கில் ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
    திருப்பூர்:

    திருப்பூரை அடுத்த வஞ்சிபாளையம் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. அதையொட்டி தனபால் என்பவருக்கு சொந்தமான பாரும் உள்ளது. டாஸ்மாக் கடையில் நளேந்திரன் (வயது 50) என்பவர் விற்பனையாளராகவும், பாரில் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை அடுத்த வேலங்குடி கிராமத்தை சேர்ந்த கண்ணப்பன் (37) என்பவர் காசாளராகவும் வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி அதிகாலை 3 பேர் கொண்ட கும்பல் ஒரு காரில், கையில் அரிவாளுடன் டாஸ்மாக் கடை மற்றும் பாருக்கு சென்றது. பின்னர் உள்ளே சென்ற 3 பேரும் டாஸ்மாக் கடை மற்றும் பாரில் உள்ள பணத்தை கொடுக்குமாறு நளேந்திரன், கண்ணப்பன் ஆகியோரிடம் அரிவாளை காட்டி மிரட்டி உள்ளனர். ஆனால் அவர்கள் பணம் இல்லை என்று கூறியதால், ஆத்திரமடைந்த அந்த கும்பல் நளேந்திரன் மற்றும் கண்ணப்பனை அரிவாளால் வெட்டியது.

    மேலும் கண்ணப்பனிடம் இருந்த ரூ.2 ஆயிரம், ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து அந்த கும்பல் தப்பி சென்றது. இதில் படுகாயமடைந்த கண்ணப்பன், நளேந்திரனை சக ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் திருப்பூர் காலேஜ் ரோட்டில் திருமுருகன்பூண்டி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

    இதில் அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பேசியதை தொடர்ந்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர்.

    இதில் அவர் ஊத்தங்கரையை அடுத்த பெரிய தள்ளப்பாடி பகுதியை சேர்ந்த கதிர் (27) என்பதும், தற்போது திருப்பூர் சாமுண்டிபுரம் முதல் வீதியில் தங்கி இருப்பதும் தெரிய வந்தது. மேலும் வஞ்சிபாளையம் அருகே டாஸ்மாக் கடை மற்றும் பாரில் 2 பேரை அரிவாளால் வெட்டி விட்டு, பணத்தை கொள்ளையடித்து சென்றவர் இவர்தான் என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து கதிரை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற 2 பேர் தலைமறைவாகி விட்டனர். போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

    கைது செய்யப்பட்ட கதிர் மீது புதுச்சேரியில் கொலை வழக்கும், இளையாங்குடி, காளையார்கோவில் போலீஸ் நிலையங்களில் வழிப்பறி வழக்குகளும், திருப்பூர் 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி, வழிப்பறி உள்பட 8-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும், பிரபல ரவுடி என்றும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
    கோவை அருகே டாஸ்மாக் ஊழியர்களை கத்தியால் குத்தி ரூ.3½ லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சூலூர்:

    கோவையை அடுத்த சூலூர் அருகே உள்ள காங்கேயம்பாளையத்தில் காட்டுப்பகுதியில் ஒரு டாஸ்மாக் கடை உள்ளது.

    இந்த கடையில் திருப்பூர் பெதப்பம்பட்டியை சேர்ந்த வேலுசாமி (வயது36), தர்மபுரியை சேர்ந்த ஜெகதீஸ் (38) ஆகியோர் விற்பனையாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.

    இவர்கள் அப்பகுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். நேற்று இரவு பணி முடிந்ததும் கடையில் வசூலான ரூ.3½ லட்சத்தை எடுத்துக் கொண்டு மொபட்டில் புறப்பட்டனர்.

    நள்ளிரவு 11 மணி அளவில் சூலூர் ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் இவர்களை வழி மறித்து இருவரின் கண்ணிலும் மிளகாய் பொடியை தூவினர். இதனால் ஜெகதீஸ், வேலுசாமி ஆகியோர் நிலை குலைந்தனர். அப்போது அவர்களிடம் இருந்த பணப்பையை பறிக்க முயன்றனர்.

    பணத்தை பறிகொடுக்காமல் இருக்க இருவரும் பையை இறுக்கிப் பிடித்தனர். இதனால் ஆவேசமடைந்த கும்பல் கத்தியால் வேலுசாமி, ஜெகதீசை குத்தியது. இதில் அவர்கள் காயம் அடைந்து கீழே விழுந்தனர். உடனே பணத்தை பறித்துக் கொண்டு கும்பல் தப்பி ஓடி விட்டது. அவ்வழியாக வந்தவர்கள் வேலுசாமி, ஜெகதீசை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் சூலூர் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சம்பவஇடத்தை சுற்றி உள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    வழிப்பறி கொள்ளையர்கள் 4 பேரும் லுங்கி, பனியன் அணிந்து வந்துள்ளனர். டாஸ்மாக் கடையில் வேலை பார்க்கும் சூப்பர்வைசர் நேற்று திருமண நிகழ்ச்சிக்காக சென்று விட்டார். எனவே விற்பனையாளர்கள் இருவரும் வசூல் தொகையுடன் சென்ற போது சம்பவம் நடந்துள்ளது.

    கொள்ளையர்கள் அப்பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×